எப்போது ரீல்ஸ் (Reels) பார்த்தாலும் அதில் பெண்களின் கவர்ச்சி ரீல்ஸ் , ஆண்களுக்கு அதற்கு வாய்ப்பில்லை... அதனால் சில கேலிக்கூத்துகளை செய்து வரும் ரீல்ஸ் ஒரு பக்கம். இரண்டுமே கண்களில் படும். இதனை தாண்டி சில முத்துக்கள் அரிதாய்.
முதலில் பெண்கள். அவர்கள் அவர்களின் கவர்ச்சியை நம்பியே வருகிறார்கள். இப்படியெல்லாம் சம்பாதிக்கலாமா என்றால் இந்த கேள்வியை நடிகைகள் படத்தில் காட்டிய கவர்ச்சியில் கேட்டிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சி தான் இந்த ரீல்ஸ்கள். ஏன் யாரோ கட் சொல்லி வருவது மட்டுந்தான் நடிப்பா... சம்பாத்தியமா , அவர்களே கட் சொல்லி மொபைலில் எடுத்தால் அது தவறாகிவிடுமா ?
எதனை சொல்லி அவர்களை மதங்கள் அடக்கியதோ அதனை முன் வைத்து இப்போது சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். சும்மா திட்டிக்கலாம்... அங்கே அத்தனை லட்சம் வியூ ஆகுதே.... அதெல்லாம் பார்க்கிறது யாரு ? கீழே கமெண்ட் செக்சன் பாத்தா நம்ம கலாச்சாரம் பண்பாடு எல்லாம் தெரியும். அக்கா உங்க கூட ஒரு நாள்.... நு பல கமெண்ட்... டேய் அக்கா கூட எப்டிடானு கேட்க தோணுது. இந்த மாதிரி வீடியோ போடும் “அக்கா”களுக்கு ஃபாலோயர் யாருனு எட்டிப்பாருங்க.. உங்க நண்பர்கள் சிலர் இருப்பார்கள். மீதி எல்லாம் ஃபேக் ஐடில இருப்பாங்க.
இது சரியா தப்பா என்றால் அது அப்படித்தான்... சரி தப்பு சொல்ல நாம யாரு...
பணம் தான் மரியாதைனு ஆனபிறகு, பணம் இருந்தால் தான் கொஞ்சமாச்சும் சுயமரியாதையோடு வாழ முடியும்னு சமூகம் உருவாகும் போது அப்படித்தான் நடக்கும். ஒரே வழி நீங்க பிளாக் செஞ்சுட்டு போறது. இல்ல நீங்களும் பார்த்துட்டு போறது.
அய்யோ குழந்தைகள் எதிர்காலம்னு வருத்தப்பட்டா.. கண்டிப்பா அது வருத்தம் இல்லை பொறாமை. நா ஒரு பிட் படம் பார்க்க ஊர் கோடியில உள்ள தியேட்டருக்கு போனேனு சொல்லும் தலை முறையும், இந்த மாதிரி எல்லாம் பார்க்க புரெசிங் செண்டர் போனேன் சொல்லும் தலைமுறையும் தான்.... இல்லாட்டி ரீல்ஸ் பார்த்து வீடியோ பார்த்துட்டு வந்து புலம்பும் நவீன நல்லவர்களாக தான் இருக்கும்...
நானும் ஒரு காலத்தில் இந்த மாதிரி பக்கங்களை ரிப்பொர்ட் அடிச்சேன்.. ஆனா அல்காரிதம் அதை எல்லாம் கொசுறா கூட மதிக்கல... அப்ப தான் சில விசயம் யோசிச்சேன்.. புரிஞ்சது...
இதுல ஆண்கள் நிலைமைதான் பாவம்... தன்னை கோமாளியாக்கினா தான் நிக்க முடியும்னு தெரிஞ்சு அதைதான் பலரும் செய்றாங்க. அதுக்கும் லட்சகணக்கில வியூவும் வருது. இதை தாண்டி பேமிலியா ஒரு சில டிராமா செய்றாங்க.. சில வொர்க் அவுட் ஆகுது, சில எரிச்சலாதான் இருக்கு.....
கருத்துகள்
கருத்துரையிடுக